![]() |
![]() |
![]() |
![]() |
VR இராஜசேகரன் அய்யா அவர்களின் 85 வது பிறந்தநாளை முன்னிட்டு தாய் இல்லம் பொறுப்பேற்று நடத்திய மாற்றுத்திறனாளிகளிக்களுக்கான வீல் சேர் கிரிக்கெட் போட்டி …..
முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்,சமூக சேவகர் அய்யா VR இராஜசேகரன் அவர்களின் 85வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்றன. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த்தாக மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் பொருட்டு இவ்விழா அமைப்பாளர் திரு. மோகனசுந்தரம் அவர்கள் தாய் இல்ல நிறுவனர் திரு, K J T புஷ்பராஜ் அவர்களை தொடர்பு கொண்டு, தங்கள் பொறுப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கிர்க்கெட் போட்டி நட்த்தப்பட வேண்டும் என்று கொண்டார். அதன் அடிப்படையில் சிவகங்கை மருது பாண்டியர் பள்ளி மைதானத்தில் வீல்சேர் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
2024 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி காலை 9.00 மணியளவில் போட்டி ஆரம்பித்து வைப்பதற்க்காக பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். போட்டி சரியாக 10.00 மணி முதல் 01.00 மணி வரை கிரேசி ரிவென்சர்ஸ், காரைக்குடி அழகப்பா யுனிவர்சிட்டி என்ற இரு அணிகள் பங்கேற்கும் 15 ஓவர்கள் கொண்ட ஒரே போட்டியாக நடத்தப்பட திட்டமிடப்பட்டது. விளையாட்டு வீர்ர்களுக்கு காலை உணவும், மதிய உணவும் ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது.
அன்று சரியாக காலை 09.30 மணியளவில் விழாவினை தலைமையேற்று போட்டியை துவக்கி வைப்பதற்காக சிவகங்கை மாவட்ட ஆயர் அவர்கள் விழாவிற்கு வருகை புரிந்தார்கள். அவர்களை வரவேற்பதற்காக சாம்பிகா பள்ளி மாணவர்கள் வரிசையில் நின்று கைத்தட்டிய படி சிறப்பாக வரவேற்றார்கள். பின்னர் இவ்விழாவிற்கு தாய் இல்ல நிறுவனர் திரு. K J T புஷ்பராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். இவ்விழாவின் பொறுப்பாளர் திரு. மோகன சுந்தரம் மற்றும் தேசிய நல்லாசிரியர் திரு.கண்ணப்பன் இருவரும் சிறப்புரை ஆற்றினார்கள். பின்னர் மதிப்பிற்குரிய மாவட்ட ஆயர் அவர்கள் தலைமையுரை சொற்பொழிவு புரிந்தார்கள். அதை தொடர்ந்து போட்டி நடக்கும் பிட்சிற்கு சென்று டாஸ் வீசி, மட்டை வைத்து பாலை அடித்து போட்டியை துவக்கி வைத்தார்கள். பின்னர் ஆட்டம் தொடங்கப்பட்டு விளையாட்டு வீரர்கள் களத்தில் விளையாட தொடங்கினர்.
ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் விறுவிறுப்பாக நடத்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிவங்கை கிரேசி ரிவென்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. அணிக்கு கோப்பைகளும், பரிசுத்தொகையும் வழங்கபட்டது, அதே போல் சிறந்த வீர்ர்களுக்கு பரிசுத்தொகையும், சான்றும் வழங்கப்பட்டது.