தாய் இல்லத்தில் இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா…
தாய் இல்லத்தில் இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது. முன்னதாக சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடிகம்பம் நடுதல், தோரண கொடி, மற்றும் அனைத்து ஏற்பாடுகளும் இங்குள்ள மாற்றுத்திறனாளிகள் தானாகவே ஏற்பாடு செய்தனர்.தாய் இல்லம் மற்றும் சீமை பட்டாளம் இராணுவ நண்பர்கள் இணைந்து இந்த சுதந்திர தின விழாவை நடத்தினர். சரியாக காலை 09.00 மணியளவில் சீமை பட்டாள இராணுவ வீரர்கள் கொடியேற்றி , தாய் இல்லத்து மாற்றுத்திறனாளி பிள்ளைகள் வீல் சேரில் அமர்ந்தபடியே நமது தேசியக்கொடுக்கு வீரவணக்கம் செலுத்தினர். தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நல வாரிய உறுப்பினரும், தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில உறுப்பினரும், தாய் இல்ல நிறுவனருமான திரு.K.J.T.புஷ்பராஷ் அவர்கள் வரேற்புரை கூறினார்கள். சிவகங்கை தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் , தாய் இல்லத்தின் காப்பாளுமான தேசிய நல்லாசிரியர் திரு.செ.கண்ணப்பன் அவர்கள் இவ்விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பித்தார்கள். மேலும் பட்டிமன்ற நடுவர், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர், தாய் இல்ல காப்பாளுர்மான திரு,T.N.அன்புத்துரை மற்றும் வந்தவாசி ஊராட்சி ஓன்றிய கவுன்சிலர்,தாய் இல்ல காப்பாளருமான திரு.K.கோவிந்தராஜன் இருவரும் இவ்விழாவிற்கு முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.சே.சரவணன் மற்றும் சிவகங்கை லயன்ஸ் கிளப் திரு.A.முத்துராஜா அவர்கள் இருவரும் சிறப்பு விருத்தினர்களாக வருகை புரிந்து சிறப்புரை ஆற்றினர். தாய் இல்லத்தின் ஆலோசகரும், சிவகங்கை தமிழ்ச்சங்கத்தின் செயலாளுருமான திரு.க.ராமசந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி , விழாவிற்கு வருகை புரிந்து சிறபித்த அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார் தாய் இல்லத்தின் பொருப்பாளார், திருமதி. மு.தனலெட்சுமி அவர்கள். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டது
நாளும் செய்வோம் நல்லதொண்டு என்றும்வேண்டும்
தங்களின் இனிய அன்பு.
இப்படிக்கு
திரு. K.J.T. புஷ்பராஜ் என்ற மலர் மன்னன்
நிறுவனர், தாய் இல்லம்
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு
வாரிய உறுப்பினர்
தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலத்துறை