![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
தாய் இல்லத்தின் சார்பாக சாத்தரசன் கோட்டையில் விழிப்புணர்வு முகாம்…
அன்புடையீர் வணக்கம் சாத்தரசன் கோட்டையில் உள்ள மக்களுக்கு மாற்றுத்திறனாளிக்கான உரிமைகள், சட்டங்கள், அரசின் சலுகைகள் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்து வருகின்றனர். எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தாய் இல்ல நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் சாத்தரசன் கோட்டைக்கு சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தை மக்களுக்கு வழங்கினர். இப்பிரச்சாரத்தில் அவ்வூர் மக்கள், மாற்றுதிறனாளிகள் பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு அடையாள அட்டை பெறுவது , அதன் மூலம் அரசின் பல்வேறு சலுகைகளை பெறுவது எப்படி என்று விளக்கப்பட்டது, மேலும் மாதாந்திர உதவித்தொகை எவ்வாறு பெறுவது, மாற்றுத்திறனாளிக்கான உரிமைகள் யாவை அவைகளை எவ்வாறு பெறுவது , சட்டங்கள், அரசாணைகள் யாவை அதனை பயன்படுத்தி எவ்வாறு பலனைடைவது போன்றவற்றை பற்றி விளக்கப்பட்டது. உதராணத்திற்கு கல்வி சம்பந்தமான அரசாணைகளை பயன்படுத்தி கல்வி கட்டணச் சலுகைகளை பெறுவது, பேருந்து கட்டணச் சலுகைகளை பெறுவது , மாநில மற்றும் மத்திய அரசாணைகள் மூலம் பெறும் கட்டணச் சலுகைகள் போன்றவற்றை பற்றி விளக்கப்பட்டது. இப்பிரச்சாரத்திற்கு பிறகு மக்களிடம் இருந்து சந்தேகங்கள் கேட்கப்பட்டு அவற்றிக்கான விளக்கங்கள் எடுத்துரைக்கப்பட்டது.
நாளும் செய்வோம் நல்லதொண்டு என்றும்வேண்டும்
தங்களின் இனிய அன்பு.
இப்படிக்கு
திரு. K.J.T. புஷ்பராஜ் என்ற மலர் மன்னன்
நிறுவனர், தாய் இல்லம்
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு
வாரிய உறுப்பினர்
தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலத்துறை