Home5 – THHAI


HTML tutorial

HTML tutorial

HTML tutorial

HTML tutorial

HTML tutorial

மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவி வழங்கும் திருவிழா……

மாற்றுத்திறனாளிகள் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கே மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அவர்களின் பொருளாதார நிலைமை மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் தவித்து வருகின்றனர். இந்நிலைமையை கருத்தில் கொண்டு பண்டிகை நாட்களை கொண்டாட முடியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு , பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளை தாய் இல்லத்தின் சார்பாக வசூல் செய்து அவற்றிலிருந்து அவர்களுக்கு அரிசி, புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த தீபாவளி நலத்திட்ட உதவியை தாய் இல்லத்தில் ஒரு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டு உதவி பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவி சுமார் alternatetextசிவகங்கையில் வாழும் 300 மாற்றுத்திற னாளிகள் தீபாவளி நலத்திட்ட உதவியை பெற்றனர். 2023 ஆம் வருடம் நவம்பர் மாதம் 5ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவி வழங்குவதற்காக தாய் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தீபாவளி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக கொண்டாப்பட்டது. இவ்விழாவில் தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளி கூட்டமைப்பின் தலைவரும், மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினரும், தாய் இல்ல நிறுவனருமான திரு. K J T புஷ்பராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். இவ்விழாவில் மூத்த வழக்கறிஞர் திரு. மோகன சுந்தரம், முக்கிய பிரதிநிதிகள், நன்கொடையாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். பின்னர் 300 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் அரிசி, புத்தாடை, இனிப்புகள் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது. பின்னர் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு விருந்து உபசரிக்கப்பட்டது.

 

 

நாளும் செய்வோம் நல்லதொண்டு என்றும்வேண்டும்

தங்களின் இனிய அன்பு.

 

இப்படிக்கு

திரு. K.J.T. புஷ்பராஜ் என்ற மலர் மன்னன்

நிறுவனர், தாய் இல்லம்

மாநிலத் தலைவர்

தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு

வாரிய உறுப்பினர்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலத்துறை