Home6 – THHAI

<<முந்தையது முகப்பு கட்டுரைகள் எங்களைப் பற்றி

அடுத்தது>> >>

தாய் இல்லத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம்…

2023 ம் வருடம் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி அன்று தாய் இல்லத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆஷா அஜித் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். தாய் இல்லத்தில் தங்கி இருப்பவர்கள் அனைவரும் தவழும் மாற்றுத்திறனாளிகளாக இருப்பதால் , அவர்களால் மருத்துவமனைக்கு வந்து மருத்துவ பரிசோதனை செய்ய இயலாத காரணத்தை , தாய் இல்ல நிறுவனர் திரு. K J T புஷ்பராஜ் அவர்கள் சிவகங்கை மாவட்ட மருத்துவகல்லூரி முதல்வர் அவர்களுக்கு விவரித்து கேட்டு கொண்டதன் பேரில் மருத்துவ கல்லூரி முதல்வர் அவ<alternatetext ர்களின் ஏற்பாட்டில் ஒரு மருத்துவக்குழு தாய் இல்லத்தில் தங்கி இருப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவ முகாமை தாய் இல்லத்தில் நடத்தினார்கள். முன்னதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆஷா அஜித் அவர்கள் இம்முகாமை தொடங்கி வைத்தார்கள். தாய் இல்லத்தில் உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனை எடுத்துக்கொண்டனர். மருத்துவ பரிசோதனையில் ஒவ்வொருவருக்கும் இரத்த அழுத்தம் , சுகர் அளவினை பரிசோதித்து , நார்மல் அளவினை விட கூடுதல், குறையாக இருப்பவர்களுக்கு மருத்துவ ஆலோசனைக ளும், மருந்துகளும் கொடுக்கப்பட்டன. தாய் இல்லத்தில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் alternatetextஅனைவரும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். முதியோர்களுக்கும் , நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மருத்துவக்குழுவில் இடம்பெற்ற ஒவ்வொரு மருத்துவருக்கும் சிறப்பு செய்யப்பட்டு மரியாதை செய்யப்பட்டு மருத்துவ முகாம் இனிதே நிறைவு பெற்றது.

 

 

நாளும் செய்வோம் நல்லதொண்டு என்றும்வேண்டும்

தங்களின் இனிய அன்பு.

 

இப்படிக்கு

திரு. K.J.T. புஷ்பராஜ் என்ற மலர் மன்னன்

நிறுவனர், தாய் இல்லம்

மாநிலத் தலைவர்

தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு

வாரிய உறுப்பினர்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலத்துறை