கலைஞர் 100 ஆண்டு விழா கருத்தரங்கம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றிய கலைஞர்…….
2023ம் வருடம் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி அன்று திருப்புவனத்தில் கலைஞரின் 100 நூற்றாண்டு விழா வெகு விமர்சையாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருங்கைகளின் சார்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் செயலாளர் திரு. ராஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பின்னர் தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவர், மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் , தாய் இல்ல நிறுவனர் திரு. K J T புஷ்பராஜ் அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள். இவ்விழாவனது திமுக மகளிர் அணி சார்பில் ஏற்பாடு செய்ப்பட்டு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் alternatetextதிருமதி. தமிழரசி அவர்கள் இவ்விழாவினை பொறுப்பேற்று நடத்தினார்கள். சமூக நலத்துறை அமைச்சர் திருமதி. கீதா ஜீவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் , கூட்டுறவுத் துறை அமைச்சர் அண்ணன் திரு. பெரிய கருப்பன் அவர்களின் தலைமையில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. திருமதி.தமிழரசி, திருமதி. கீதாஜீவன், திரு. பெரியகருப்பன் மூவரும் தமிழ்நாடு தவழும் மாற்றுத்தினாளி கூட்டமைப்பின் தலைவர், மாற்றுத்திறனாளி நல வாரிய உறுப்பினர், தாய் இல்ல நிறுவனர் திரு. K J T புஷ்பராஜ் அவர்களுக்கு சால்வை போர்த்தி பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திருமதி.தமிழரசி , திருமதி. கீதாஜீவன், மற்றும் திரு. பெரிய கருப்பன் அவர்கள் கலைஞர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு செய்த நன்மைகள், சலுகைகள் பற்றி விவரித்தார்கள். 2009ல் மாற்றுத்திறனாகள் கூட்டமைப்பின் 11 அம்ச கோரிக்கையை ஏற்று அதனை அரசாணை செய்தது கலைஞர் கருணாநிதி அவர்களின் பெரும் சாதனையாக கருத்தப்பட்டது.
நாளும் செய்வோம் நல்லதொண்டு என்றும்வேண்டும்
தங்களின் இனிய அன்பு.
இப்படிக்கு
திரு. K.J.T. புஷ்பராஜ் என்ற மலர் மன்னன்
நிறுவனர், தாய் இல்லம்
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு
வாரிய உறுப்பினர்
தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலத்துறை