Home8 – THHAI


HTML tutorial

HTML tutorial

HTML tutorial

HTML tutorial

HTML tutorial

 

சிவகங்கையில்  உயரம் குறைவான ஒரு மாற்றுத்திறனாளி பெண் தனது சகோதரன் ஸ்ரீனிவாசன் என்பவரை பராமரித்து, ஒருவருக்கொருவரின் உதவியுடன் வாழ்வாதாரம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் உலகையே ஆட்கொண்ட கொரானா இந்த மாற்றுத்திறனாளி பெண்ணையும் விட்டுவைக்கவில்லை. அந்த மாற்றுத்திறனாளி பெண் கொரானாக்கு பலியானார். உறவுகள் இல்லாத சூழலில் , ஒரே ஆதரவாக இருந்த தன் அக்காவை இழந்த ஸ்ரீனிவாசன் அக்கம் பக்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர் திருமதி. கீதா அவர்களின் உதவியோடு வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு சர்க்கரை வியாதி இருந்த காரணத்தால் சிவகங்கை மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டு , ஒரு காலில் முழங்கால் வரை அகற்றப்பட்டது.

யாருமற்ற சூழ்நிலையில் இருந்த ஸ்ரீனிவாசனக்கு அடைக்கலம் தர, சமூக ஆர்வலர் திருமதி. கீதா அவர்களும், சிவகங்கை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி நிர்வாகமும் தாய் இல்லத்தை நாடினார்கள். தாய் இல்லமும் அவரை இன்முகத்தோடு வரவேற்று ஆதரவு கரம் நீட்டியது. தாய் இல்லத்தில் உள்ள அனைவரும் மாற்றுத்திறனாளிகள் என்றாலும் அவரவர்களால் முடிந்த சிறு சிறு உதவியை அவருக்கு செய்து கவனித்து கொண்டு வந்தோம். இந்நிலையில் அவருக்கு இரத்ததில்  சர்க்கரையின் அளவு அதிகமானதால் மீண்டும் சிவகங்கை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மேல்சிகிச்சை தேவைப்பட்டதால் அங்கிருந்து மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பின்பு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த அன்று காலமானர். இந்த தகவல் தாய் இல்லத்திற்கு கிடைக்கப்பெற்றவுடன் , தாய் இல்ல நிர்வாகிகள் அனைவரும் அவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக சென்றோம்.

இடைப்பட்ட காலத்தில் மாற்றுத்திறனாளி ஆன ஸ்ரீனிவாசன் அவர்களை நல்லடக்கம் செய்ய அவருக்கு உறவினர்கள் இல்லாதது பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் செயலாளர் சொர்க்கம் ராஜா அவர்களும் உறுப்பினர்களுடன் அங்கு வந்து சேர்ந்தார். அங்கு சென்ற பின்பு தான் நிலைமை புரிந்தது நாங்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகள் எங்களால் அவரது உடலை வாங்கி கொண்டு அடக்கம் செய்ய முடியவில்லையே என்று ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டது மிகுந்த மன வலியை ஏற்படுத்தியது. பின்பு சொர்க்கம் ராஜா அவர்கள் மதுரை செஞ்சிலுவை சங்கத்தினரின் தலைவர் அவர்களை தொடர்பு கொண்டு மனித உதவி கேட்டுகொண்டதிற்கிணங்க, ஒரு நபர் மட்டும் அங்க வந்து நல்லடக்கம் செய்ய தேவையான அனைத்து காரியங்களையும் செய்து கொடுத்தார். பின்னர் அவரது உடல் மதுரை தத்தனேரிக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

நாளும் செய்வோம் நல்லதொண்டு என்றும்வேண்டும்

தங்களின் இனிய அன்பு.

 

இப்படிக்கு

திரு. K.J.T. புஷ்பராஜ் என்ற மலர் மன்னன்

நிறுவனர், தாய் இல்லம்

மாநிலத் தலைவர்

தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு

வாரிய உறுப்பினர்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலத்துறை

 

 

https://estheticsadvancedclasses.com/

gate of olympus

judi bola

slot bonus new member 100

slot bet 200

GADUNSLOT

gadunslot

https://lynk.id/linkgadunslot