Home9 – THHAI


HTML tutorial

HTML tutorial

HTML tutorial

HTML tutorial

HTML tutorial

தாய் இல்லம் வெகு விமர்சையாக நடைபெற்ற மகளிர் தின விழா பெண் ஆளுமை விருதுகள் 2024

நலத்திட்ட உதவி
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாப்படுகிறது. பெண் மாற்றுத்திறனாகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு நிறுவப்பட்ட தாய் இல்லம் , பெண்களை கெளரவிக்கும் பொருட்டு தாய் இல்லத்தின் சார்பாகா 8 துறைகளைச் சார்ந்த 55 பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

மார்ச் 8 2024 அன்று மகளிர் தினத்தை முன்னிட்டு , மார்ச் 11 2024 அன்று தாய் இல்லத்தின் சார்பாக மகளிர் தின விழா கொண்டாப்பட்டது. இவ்விழாவில் பெண் ஆளுமை விருதுகள் 2024 என்ற தலைப்பில் 8 துறைகளைச் சேர்ந்த 55 பெண்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. இவ்விழாவிற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உயர்திரு திருமதி. ஆஷா அஜித் அவர்கள் தலைமையேற்றார்கள். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ஆ. தமிழரசி ரவிக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம், சிவகங்கை MRI திருமதி. பிரியா உதயக்குமார் அவர்கள் சிறப்பு விருத்தினர்களாக கலந்து கொண்டனர்.

முன்னதாக இவ்விழாவை  சிறம்பட நடத்திவிட வேண்டும் என்ற நோக்கில் தாய் இல்லத்தில் உள்ளவர்களால் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அனைத்து வேலைகளையும் பொறுப்பாளர்கள் திரு, ராமச்சந்திரன் மற்றும் தாய் இல்ல நிறுவனர் திரு.K J T புஷ்பராஜ் அவர்களின் வழிகாட்டுதலோடு வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அதன் படி மார்ச் 11ம் தேதி மாலை 5 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் படி யுவராஜ் கலைக்குழவினரின் மங்கள் இசையோடு விழா ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் பாரதி இசை கல்வி கழக குழுவினரின் பரதநாட்டியமும் அரங்கேறியது. அதை தொடர்ந்து கருங்குயில் கலைக்குழுவின் தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கட்டகால் ஆட்டம்நடைபெற்றது. அதை தொடர்ந்து   St.Guanaella Anbagam Resdiental Special School ( இயேசுவனம்) த்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பல்சுவை நடனமும், பின்னர் பாலர் பாதுகாப்பு இல்லத்தின் குழந்தைகளின் நடனமும், அதை தொடர்ந்து அதீபன் நாட்டியாலாயா வின் மகளிர் சிறப்பு பாடல்களுக்கு நடனமும் ஆடப்பட்டது.

பின்னர் இவ்விழாவிற்கு கலந்து கொள்ள வந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆஷா அஜித் அவர்களும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ஆ.தமிழரசி ரவிக்குமாரும், மாவட்ட மாற்றுதினாளி அலுவலர் திருமதி. பிரியா உதயக்குமார் அவர்களும் மேடையேற்றப்பட்டு ,அவர்களுக்கு  தாய் இல்லத்தின் பொறுப்பாளர் திருமதி. தனலெட்சுமி வெங்கடேசன் மற்றும் செயலாளர் செல்வி. கோமதி அவர்களாலும் சிறப்பு செய்யப்பட்டது.

தமிழ்தாய் வாழ்த்துடன் விருது வழங்கும் விழா ஆரம்பிக்கப்பட்டது. தாய் இல்லத்தின் பொருளாளர் திருமதி. தனலெட்சுமி வெங்கடேசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தாய் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது முதல் அதன் செயல்பாடுகள், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தரும் பாதுகாப்பு வரை விளக்கி விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள், விருதாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்கள். அதனை தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய திருமதி. பிரியா உதயகுமார் அவர்கள்  மாற்றுதிறனாளிகளின் நிலைமை பற்றியும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் பேசினார்கள். பின்னர் பேசிய மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ஆ. தமிழரசி அவர்கள் பேசியாதவது “ மறைந்த முன்னாள் முதல்வர் திமுக தலைவர் டாக்டர். கலைஞர் அவர்கள்தான் மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறை கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நல துறை ஒதுக்கியதும், ஊனமுற்றோர்கள் என்ற பெயரை மாற்றி மாற்றுத்திறனாளிகள் என பெயர் மாற்றியதும், மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தின் போது அவர்களை களதுக்கே சென்று பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்கள்” என்று கூறினார். பெண்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றும், பெரியார், அண்ணா, கலைஞர் வழியை பின்பற்றி பெண்ணடிமைத்தனம்,

பின்னர் 55 பெண் விருதாளர்களுக்கும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொன்னாடை பொற்றி விருதுகளை வழங்கினர்.

முடிவுரை பற்ரி சிறு வுரை எழுத வேண்டும் இங்கே