தாய் இல்லம் ரிலாக்ஸ் பார்க் கரும்பு ஜூஸ் மற்றும் தாய் இல்ல கைவினைப் பொருட்கள் ஸ்டால்
செல்கோ பவுண்டேசன் மற்றும் தாய் இல்லம் இணைந்து மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்காக சிறு வியாபார கடை ஒன்றை தாய் இல்லத்தில் நிறுவியுள்ளது.
செல்கோ என்ற சோலார் நிறுவனம் தாய் இல்லத்திற்கு பெரும் ஆதரவை பல காலமாக கொடுத்து வருகிறது. இந்நிலையில் தாய் இல்லத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பதற்கு ஸ்டால் ஒன்றை அமைத்து தருவதாக கூறியிருந்த செல்கோ நிறுவனம் தாய் இல்லத்தில் தயாரிக்கப்படும் பொருட்களோடு ஏதெனும் ஒரு சிறு வியாபாரத்தையும் சேர்த்து நிறுவுங்கள் என்று கூறினர். அதன் அடிப்படையில் சோலார் பவரில் இயக்கூடிய கரும்பு ஜூஸ் மிஷின் என்று அவர்களால் பரிசளிக்கப்பட்டு, ஷேட் போன்ற ஒரு கடையும் ஏற்படுத்தி கொடுத்தது செல்கோ நிறுவனம். அனைத்தும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டவுடன் இன்று ஏப்டல் 15 2024 அன்று கடை திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கடை திறப்பதற்கு முன் இரவே அனைத்து ஏற்பாடுகளையுமே தாய் இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளே ஒருங்கிணைந்து அனைத்து வேலைகளையும் கச்சித்தமாக செய்து முடித்தனர். காலை 6.00 மணியளவில் பால் காய்ச்சப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் காலை 9.00 மணியளவில் சிவகங்கை மாவட்ட தொழிற் மையம் அலுவலர் , வந்தவாசி கவுன்சிலர் திரு. கோவிந்தன், மற்றும் திருமதி. கயல்விழி பாண்டியன், எல்ஐசி முகவர் திருமதி. சகாயராணி ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தாய் இல்லத்திற்கு ஆலோசராக செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் திரு. ராமசந்திரன் அவர்கள் விழாவினை முன் நின்று துவக்கி வைத்தார். விழாவில் தாய் இல்ல நிறுவனர் திரு. K J T புஷ்பராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பின்னர சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் கட் செய்யப்பட்டு கடை நல்வாழ்த்துகளுடன் இனிதே திறக்கப்பட்டது. பின்னர் தாய் இல்ல நிறுவனர் திரு. K J T புஷ்பராஜ் அவர்களால் கரும்பு ஜூஸ் மிஷினை இயக்கப்பட்டு அனைவருக்கும் கரும்பு ஜூஸ் வழங்கப்பட்டது.