தாய் இல்லத்தில் உள்ள தவழும் மாற்றுத்திறனாளிகள் தங்களுது வாக்குரிமை ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்…
இந்தியாவில் ஐந்து வருடங்களுக்கு முறை பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது . கடந்த 2019 க்கு பிறகு ஐந்து வருடங்கள் முடிந்த நிலையில் 2024 பாராளுமன்ற தேர்தல்கள் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டு ஏழு கட்டங்களின் தேர்தல் தேதியும், நடைபெறும் மாநிலங்களின் விபரத்தையும் அதில் குறிப்பிட்டிருந்தது.இதன் படி தமிழ்நாட்டிற்கு முதல் கட்ட வரையறைக்குள் 2024 ஏப்ரல் 19 ம் தேதி அன்று வாக்குபதிவு அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு கட்சிகள், பிரமுகர்களின் புயல்வேக பிரச்சாரத்திற்கு பிறகு ஏப்ரல் 19 ம் தேதி வாக்குவதிவு காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு மாலை 6 மணிக்கு முடிந்தவடைந்தது.
தவழும் மாற்றுத்திறனாளிகள் தனது அடிப்படை தேவைகளுக்கே வெளியில் வருவது கடினமாக இருந்த சூழலில் , பல்வேறு அரசாங்களின் உதவி உபகரணங்கள், சலுகைகள், ஆணைகள் உதவியுடன் வெளி உலகிற்கு வந்து பழகினர். மேற்சொன்ன திட்டங்களை மற்றும் உதவிகளை மாற்றுத்திறனாளி மக்களுக்கு எடுத்து சென்று அவர்களை வெளி உலகிற்கு கொண்டு வந்ததில் தாய் அறக்கட்டளை மூலம் செயல்பட்டு வரும் தாய் இல்லம் பங்கு வகிக்கிறது.
இந்திய குடிமகனின் முக்கிய ஜனநாயக கடமையான வாக்குரிமையை அனைத்து மக்களும் நிறைவேற்றுவது போலவே , எந்த சூழலிலும் வாக்குரிமையை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் அலுவலர் திருமதி. ஆஷா அஜித் அவர்களின் வழிகாட்டலின் படி அனைத்து மாற்றுத்திறனாளிகளின் ஜனநாயக கடமையை நிறைவேற்றப்பட வெண்டும் என்பதற்காக தவழும் மாற்றுத்திறனாளியான K J T புஷ்பராஜ் அவர்களை தேர்தல் கண்காணிப்பு குழு பொறுப்பாளராக சேர்த்து அனைத்து பகுதிகளையும் வாக்களிப்ப்பதற்கு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தாய் இல்லத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வாக்கு பதிவு எங்கு உள்ளது அந்த அந்த வாக்குசாவடிகளுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யபட்டு வாக்களித்து வந்தனர். அனைத்து வாக்கு சாவடியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகளும் முன்னுரிமையும் கொடுக்கப்பட்டதால் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாக்குகளை எளிதாக செலுத்தி வந்தனர். அனைத்து தேர்தல் ஊழியர்களுக்கும் தாய் இல்லம் , தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பாக மிக்க நன்றி தெரிவிக்கப்பட்டு கொள்கிறது.