அன்புடையீர் வணக்
தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்து தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி தவழும் மாற்றுத்திறனாளிகளின் வழ்வாதாரத்தை முன்னேறுவதற்காக
இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறதுவெளியூர்களுக்கு பயணிக்கும் போது உடல் உபாதைகளை தவிர்ப்பதற்காக நீர் அருந்துதல், உணவு உட்கொள்ளுதல் ஆகியவகளை கட்டுபடுத்த வேண்டிய நிலை தவழும் மாற்றுத்திறனாளிகளின் நிலை. எங்கள் அமைப்பின் மூலம் அரசிற்கு பலமுறை கோரிக்கைகள் வைத்த பிறகே சில இடங்களில் சிறப்பு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள பெண் மாற்றுத்திறனாகளின் நிலை அவர்களின் பெற்றோகளுக்கு பிறகு வருத்தமான நிலைக்கு தள்ளப்படும். தவழும் ஆண், பெண் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோருக்கு மரணம் கூட நிம்மதியான மரணமாக அமைவதில்லை.
ஏன் ?
தங்களுக்கு பிறகு இந்த நிலையில் இருக்கும் தங்கள் பிள்ளையை யார் பார்த்துகொள்வார்கள் என்ற கவலை தான் இதற்கு காரணம்.
நல்ல நிலையில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு குறைவாக இருக்கும் இந்த காலத்தில் , ஒரு தவழும் பெண் மாற்றுத்திறனாளி குக் கிராமத்தில் ஒட்டுத்திண்ணையில் பக்கத்து வீட்டில் கொடுக்கும் ஒரு வேளை உணவை அருந்துவிட்டு இருக்கும் பொழுது அந்த பெண்ணிற்கு ஏற்படும் பாதுகாப்பற்ற சூழ்நிலை சொல்லிமாழாது.
இந்த நிலை மாற
தமிழகத்திலேயே முதல்முறையாக சிவகங்கை மாவட்டம், வாணியங்குடி ஊராட்சி, பனங்காடி ரோட்டில் மாற்றுத்திறனாளிகள் ஒன்று கூடி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்காக தாய் இல்லம் என்ற அமைப்பை ஆண்டு ஆரம்பித்து ஆண்டு அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் அம்மா திருமதி. மலர்விழி அவர்களால் 15 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டு, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டு தாய் இல்லத்தின் செயல்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது.
அடுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் ஐயா திரு. ஜெயகாந்தன் அவர்கள் ஆண்களுக்கான கூடுதல் செட் அமைத்து கொடுத்தார்கள். தற்போது 30 மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையோடும், சுயமரியாதையோடும் வாழ்ந்து வருகிறார்கள். முழுக்க முழுக்க இந்த இல்லதிற்கான உணவு, உடை மற்றும் மருந்துவ செலவீனங்கள் அனைத்தும் நல் உள்ளங்களின் உதவியோடு செயல்படுத்தி வருகிறோம். இதை பார்க்கும் அனைவரும் இது போன்ற இல்லங்கள் தெரியாமல் தவித்து கொண்டிருக்கும் எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு வழி காட்டுங்கள்.
மகாத்மா காந்தி கூறியதை போல் ஊனமுற்றோருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் தொண்டாகும் என்ற எண்னம் கொண்டு பொருளாகவும், பணமாகவும், ஆலோசனைகளாகவும் வழங்கி உதவிடுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம். எங்கள் இல்லத்தில் தயாரிக்கப்படும் பொருட்களின் விபரங்கள் பதிவிட்டுள்ளோம். தேவைப்படுவர்கள் வாங்கி எங்கள் வாழ்வாதரத்திற்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாளும் செய்வோம் நல்லதொண்டு என்றும்வேண்டும் தங்களின் இனிய அன்பு.
இப்படிக்கு திரு. K.J.T. புஷ்பராஜ் என்ற மலர் மன்னன் நிறுவனர், தாய் இல்லம் மாநிலத் தலைவர் தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு வாரிய உறுப்பினர் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலத்துறை